அம்மாவுக்காகவே வந்து சென்ற அஜித்தை வசைபாடுவது தவறு..!


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சிரிப்புடன் ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்துக்கொண்டதற்கும் அதன்பிறகு மறுநாள் அதிகாலை முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த அஞ்சலி செலுத்தியபோது அஜித்துடன் சிலர் எடுத்துக்கொண்ட செல்பிக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

சூழலை சீரியஸை மறந்து கருணாஸ் அந்த இடத்தில் கண்ணியம் காக்க தவறிவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள்… ஆனால் அதேசமயம் முதல்வர் ஜெயலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே பல்கேரியாவில் இருந்து பல சிரமங்களுக்கு இடையே வந்து சென்ற அஜித்தை பற்றியும், அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்ததை பற்றியும் விமர்சிக்க தேவையில்லை என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பல்கேரியாவில் கடும் குளிர் என்றாலும் கூட தொடர்ந்து படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த செய்தி கேட்ட அஜீத் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு விடியற்காலை 4 மணிக்கு கிளம்பியுள்ளார்.

அந்த நேரத்தில் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லை என்பதால், ரோமானியா சென்றுள்ளார். ரோமானியாவில் இருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சுமார் 20 மணி நேரம் அஜீத் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் டிச-7ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்லி செலுத்தினார்.

அந்த நேரத்தில் தான் நடிகர் சோ இறந்த தகவல் கிடைத்தது. உடனே முதல் ஆளாக அப்பல்லோ மருத்துவமனைக்கே சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் வீட்டிற்கே கிளம்பினாராம். பின்னர் அன்று இரவே ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பல்கேரியாவுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

Leave a Response