ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக ரெயின்ட்ராப்ஸ்ன் தீபாவளி கொண்டாட்டம்

சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ஆதரவற்ற 375 ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

ரெயின்ட்ராப்ஸ் இளைஞர்கள் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சமூக விழிப்புணர்வு கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு கூறி வருகிறது. குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, சாலையோரங்களில் பசித்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம், போன்ற பல்வேறு சமூக முன்னேற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் சார்பில், ஆனந்தம், சேவாலயா, சீரஸ் ஹோம் மற்றும் பால குருகுலத்தில் வசிக்கும் 375க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் தீபாவளி கொண்டாட்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் வேல்முருகன், ஷம்சுதீன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் இது குறித்து கூறுகையில், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகளும், பெரியோர்களும் பிறரைப் போலவே தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற வகையில் ரெயின்ட்ராப்ஸ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இது போன்று பல்வேறு சமூக முன்னேற்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தின் தூணாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். ஸ்பென்சர் பிளாசா, சத்தியபாமா பல்கலைகழகம், ஸுபி கேண்டீஸ், ஆசிப் பிரியாணி, மெகா டிஜிட்டல் , மற்றும் சாஜ் அண்ட் தாஜ் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சி சிறக்க துணை நின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response