சூர்யாவின் தந்தையாக நடிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்..!


1990ல் ‘புரியாத புதிர்’ படம் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமார் 26 வருட காலம் இந்த திரையுலகில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வீற்றிருக்கும் சாதனையை இனிவரும் இயக்குனர்கள் யாரும் நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகம் தான். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கிய பெருமை இவர் ஒருவரைத்தான் சேரும்..

முன்புபோல இவர் தொடர்ந்து படம் இயக்குவாரா என்பது தெரியவில்லை.. ஆனால் தொடர்ந்து குணச்சிர வேடங்களின் மூலம் நடிப்பு பயணத்தை தொடர்வார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.. அதன் வெளிப்பாடுதான் தனுஷ் படத்தை தொடர்ந்து, சிவகர்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருவது. இப்போது அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

Leave a Response