கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத திருநாள் இயக்குனர்..!

 

நேற்று ஜீவா, நயன்தாரா நடித்த ‘திருநாள்’ படம் வெளியானது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்தப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. முந்தைய ஜீவா படங்களின் தோல்விகளை எல்லாம் கொஞ்ச ஒதுக்கிவைத்துவிட்டு இந்தபடத்திற்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது..

அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதை நடக்கும் இடம் கிராமத்து களத்தில் இருந்துவிட்டு போகட்டும்..

ஆனால் கதை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் பெரியமருது படத்தில் விஜயகாந்த், முஸ்தபா படத்தில் நெப்போலியன் என சீனியர் ஹீரோக்களே நடித்து ரசிகர்கள் பார்த்து பார்த்து சலித்துப்போன இந்த கதையே தேர்ந்தெடுத்ததே தவறு..

குறைந்த பட்சம் அதை சுவாரஸ்யமான திரைக்கதையாலாவது அழகாக்கி இருக்கலாமே என ரசிகர்கள் அங்கலாய்ப்பதை பார்க்க முடிந்தது. முன்னணி கலைஞர்கள் பலர் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் இயக்குனர் ராம்நாத் என்பதே உண்மை.

 

 

Leave a Response