ரஜினி மீண்டு(ம்) வர சத்திய விரதம் இருந்த கலைப்புலி தாணு..!

 

கபாலி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் தாணு, ரஜினியை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு பலமுறை தள்ளிப்போனதையும், இறுதியாக அது கைகூடி வந்த விதத்தையும் விவரித்தார். இந்தப்படத்தை தயாரிப்பதற்காக விரதம் இருந்தார். அதுபற்றி அவரே சொல்வதை கேட்போம்..

“சூப்பர்ஸ்டார் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஒரே காரணத்துக்காக ஸ்ரீ ராகவேந்திரா சாமிக்கு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரதம் இருந்தேன். இந்த விரதம் பொய் இல்லை, இந்த விரதம் சத்தியமானது. கண்டிப்பாக அவர் மீண்டு வந்து எனக்கு ஒரு படம் நடிப்பார் என்று நான் நம்பிக்கையோடு காத்திருந்தேன். அதே போல் சூப்பர்ஸ்டார் நன்கு குணமாகி வந்தார். அதன் பின்னர் திடீரென்று என்னை அழைத்து நாம் ஒரு படம் பண்ணாலம் என்றார். நான் மகிழ்ச்சியுடன் சரி என்றேன்” என்று கபாலி’ படம் உருவான கதை பற்றி கூறினார் தாணு.

 

 

Leave a Response