கோயம்புத்தூரில் செய்வதை யாழ்ப்பாணத்திலும் செய்யவேண்டும் – தமிழ் அமைச்சர் பேச்சு

யாழ் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும்
பனைகள்தாம். ஆனால் வளமான பனைகள்பற்றி ஆய்வாளார்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று விவசாயஅமைச்சர் பொ.ஐங்கரநேசன் வருத்தம் தொpவித்துள்ளார்.

வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக விவசாயபீட விரிவுரையாளர் கலாநிதி சீ.வசந்தரூயபா தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கத் தொடக்க அமர்வில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தொpவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பனை என்று நாங்கள் பொதுவாக அழைத்தாலும் பனைகளில் வித்தியாசம் உண்டு. வடக்கில் வேறுபட்ட இயல்புகளைக்காட்டுகின்ற பனைமரங்கள் இருக்கின்றன. இவற்றில் குட்டையான பனை மரங்கள் அதிக எண்ணிக்கையான பழங்களைத்தரக்கூடிய பனை மரங்கள் அதிகம் பதநீரைத் தரக்கூடிய பனை மரங்கள் அதிக வெல்லச் செறிவைக்கொண்ட பதநீரைத்தரவல்ல பனைமரங்களைக் கள ஆய்வுகளின்மூலம் அடையாளம் காண்பது அவசியம்.

கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் 200 வகையான பனைகளை இனம்கண்டு தனது வளாகத்தில் நட்டுப் பராமரித்து வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடமும் பனைகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இவற்றை விவசாய பீடம் இயங்கும் கிளிநொச்சியில் நடுகைசெய்து பராமரிக்கவும் முன்வர வேண்டும் இதற்கு பனை அபிவிருத்திச் சபையும் பனை ஆராய்ச்சி நிலையமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response