கமல் தற்போது எப்படி இருக்கிறார்? கெளதமி விளக்கம்

மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் “ நமது “  இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது…

இப்படம் சம்மந்தமாக, கெளதமி கூறியதாவது..

இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார். அந்த இயக்குநரைப் பற்றி ஆந்திரா முழுவதும் பெரிய பேச்சு. அவர் இயக்கிய “ அய்த்தே “ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்த படம்.  அவர் மீது எல்லோருக்கும் ஒரு மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்கச் சம்மதித்தேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாபாத்திரங்களில்  நடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேனோ..  அது மாதிரியான கதாபாத்திரத்தை இயக்குநர் சொன்னதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

படப்பிடிப்பு நடைபெற்ற போது. யாருக்கும் சலிப்பு வராத மாதிரி இயக்குநர் படப்பிடிப்பை நடத்தியதால் படம் நல்ல படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனக்குக் கதை சொன்ன உடனே ஒத்துக்கொண்டேன். நடிகர் மோகன்லாலிடம் கதை சொல்லக் கேட்ட போது. ஒரு வருடம் ஆகும் என்று கூறிய அவரே..முழு கதையையும் கேட்ட உடனே.. நடித்து முடித்து இப்போது படம் வெளியாகப் போகிறது.

நான்கு தலை முறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய வன்முறை இல்லாத படம்.  இன்றைய “ நமது “ தலைமுறையினர் பார்க்கவேண்டிய படமாகவும் இது இருக்கும்.

நான்கு கதாபாத்திரங்களைச் சுற்றி ஒரு கதை.  நால்வரும் சந்திக்கும் போது. படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்.

பாபநாசம் படத்தை பார்த்துதான் என்னை நடிக்கக் கேட்கிறீர்களா என்று நான் கேட்டேன்.. ஆனால் நான் பாபநாசம் படம் பார்க்க வில்லை இந்தக் கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரஜினி கோரப்பட்டி, இயக்குநர் சந்திர சேகர் ஏலட்டி இருவரும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடுவது பெரிய விஷயம். நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் சொந்தக் குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்.

தொடர்ந்து நடிப்பீர்களா?

கண்டிப்பாக.. எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள், நல்ல டீம் வந்தால் நடிப்பேன். நான் பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு எங்கும் போகல..அது என் ரத்ததிலேயே ஊறியது.  

கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்?

குணமாகிக்கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது.

கபாலி படத்தை பார்த்து கமல் விமர்சனம் எழுதியதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவி வருகிறதே?

காலில் அடிபட்டு படுத்திருக்கிற அவரால் எப்படி படம் பார்க்க முடியும் அது தவறான செய்தி என்று கூறினார்..

உங்கள் மகளை எந்தத் துறையில் ஈடுபடுத்த எண்ணம்?

கலைத் துறைதான் அவுங்களுக்கும் விருப்பம். இதில் எந்தத் துறை அவுங்களுக்கு பிடிக்கிறதோ அதில் ஈடுபடுவார் என்றார்.

 

Leave a Response