பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பேசிய காரணத்தாலேயே ஊடகவியலாளர் பிரபாத் சிங் மூன்று மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஸ்தர் பகுதியில் ஊடகவியலாளர்களான சந்தோஷ் யாதவ், சோமருநாக் ஆகியோர் மாவோயிஸ்ட் தொடர்பில் இருப்பதாகக் குற்றஞ்சாற்றப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்கள்.
அவ்விருவரின் கைதுக்கு எதிராக பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் பிரபாத் சிங் நடத்தினார்.
போலி என்கவுன்ட்டர் படு கொலைகள், பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து எழுதுவதை நிறுத்த மறுத்துவந்தார்.
போராட்டத்தின் போது பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டுவிட்டது என்று பேசினார். அதன்காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சிறைக்குள் அடைக்கப்பட்டார்.
பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தால் 22.6.2016 அன்று பிரபாத்சிங் பிணையில் விடுவிக்க உத் தரவானது.
25.6.2016 அன்றுதான் ஜக்தால்பூர் சிறையிலிருந்து விடு விக்கப்பட்டார்.அவருடைய குடும்பத்தினர் ராய்ப்பூருக்கு எளிதில் சென்று வரக்கூடிய தொலைவில் தண்டேவாடா பகுதியில் வசித்து வருகிறார்கள். ஆனாலும், சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரபாத் சிங் தம் குடும்பத்தினரை சந்திப்பதற்கு செல்லாமல், நேரிடையாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்காக சட்டமுன்வரைவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளித்து 26.6.2016 அன்று கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட முடியாது. இந்த அரசு மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை பாஸ் தாரில் முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை. அவர்கள் பெயரைக் கூறிக்கொண்டு, மாநில, மத்திய அரசின் நிதிகளைக் குவிப்ப திலேயே கவனம் செலுத்தி வரு கிறது. பாஸ்தாரில் ஜனநாயகம் என்பதே கிடையாது. காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒப் பந்ததாரர்கள் சிலர்தான் மாநிலத் தில் ஆட்சி செய்து வருகிறார்கள். பாஸ்தாரில் செலவிடப்படுகின்ற நிதிகளின்மூலமாக வளர்ச்சி ஏற்படுவதாக தெரியவில்லை. இதையெல்லாம் நான் வெளிப் படையாக எழுதுவதால் மாநில அரசு அதை விரும்பவில்லை.
அரசின் பேச்சில் இரட்டைத் தன்மை உள்ளது. சந்தோஷ் மற்றும் சோமருவுக்காக நாங்கள் போராடியபோது, அவர்களை விடு விப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுததுவருவதாக கூறினார் கள். அதே நேரத்தில், அரசின் நிர்வாகத்தில் இருப்பவர்களே தேச விரோத சட்டத்தின்கீழ் சந்தோஷ்மீது குற்றச்சாற்றினை அளிக்கவும் முனைந்தார்கள். உண்மையிலேயே இந்த அரசு பத்திரிகையாளர்களின் பாது காப்பு, சுதந்திரத்தை உறுதி செய் வதாக இருந்தால், சந்தோஷை விடுதலை செய்திருக்க வேண் டும்’’ என்றார்.
பத்திரிகையாளர்களை மறை முகமாக தங்களுக்கான ஒப்பந்த தாரர்களாகவும் இந்த அரசு மாற் றிட முனைந்துள்ளது. அப்படி மாறும் பத்திரிகையாளர்கள் சுதந் திரமாக நடமாடுகிறார்கள்.
அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்கும் என்னைப் போல் உள்ள மற்ற பத்திரிகை யாளர்கள்நிலை மோசமடைந்து வருகிறது. அரசு அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களின் கூட்டணி யால் பஸ்தாரில் நிலைமை மேன்மேலும் மோசமாகிவிடும்.
நான் பிணையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநில அரசு வெளி மாநிலங்களி லிருந்து அதிக பணம் செல வழித்து வழக்குரைஞர்களை வாதிடுவதற்காக அமர்த்தியது. சாதாரண பத்திரிகையாளனாகிய என்னிடம் இந்த அரசு நிர்வாகம் ஏன் இப்படி அச்சப்பட வேண் டும்? என்று பிரபாத் சிங் கேள்வி எழுப¢பினார்.
மேலும் பிரபாத் சிங் கூறும் போது, “கைது செய்யப்பட்ட சில மாதங்களில் மூத்த காவல் அதிகாரி ஒருவர் நேரிடையாகவே, இப்படியெல்லாம் எழுதுவதை நிறுத்து, மேல் அதிகா ரியை உடனடியாக போய்ப்பார், காவல்துறையினருக்கு எதிராக எழுதுவதை நிறுத்திவிடு. உன் மீது உள்ள அனைத்து வழக்கு களையும் நீக்கிவிடுகிறேன் என் றார். ஆகவே, பத்திரிகையாளர் கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மூன்று மாத சிறை வாழ்வில் அரசியல்ரீதியிலாக தண்டிப்பது குறித்த பயம் போய்விட்டது’’ என்றார்.