நீண்ட நெடிய மரபில் வந்தவர் பழநிபாரதி – கவிஞர் விக்ரமாதித்யன் புகழாரம்

பழநிபாரதியிடம் கவித்துவம் இருக்கிறது; தமிழ் இருக்கிறது; மரபு இருக்கிறது; இவற்றாலேயே அவன் கவிஞனாகிவிடுகிறான்.

ஒரு கவிதை என்ன சொல்ல வேண்டும்; எப்படிச் சொல்ல வேண்டும் என்பனவெல்லாம் இவனுக்குத் தெரிந்திருக்கின்றன.

மிகக் குறைந்த வரிகள்; சொல்லால்
பொருள் நோக்கி / தாண்டிப் போகிற கவிதை;
எங்கே பார்த்தான்; எப்படிச் சொல்கிறான்; எவ்விதம் கவிதையாகத் திரண்டு வந்திருக்கிறது; தந்தையிடமிருந்து வந்ததா; தமிழ் மரபிலிருந்து வந்ததா; எங்கே இருந்து வந்தன தமிழும் கவிதையும்.

உலகத்திலேயே வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு – அன்றும் சரி இன்றும் சரி – நம்முடைய தாய்மொழியில் நிறையவே நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும்; செவ்வியல் மொழி தந்துகொண்டிருக்கும் செல்வச் சிறப்புகளில் ஒன்று இது; கண்டு சொல்லவும் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவும்தாம் ஆளுமைகளும் முயற்சிகளும் வேண்டப்படுகின்றன. பழநிபாரதி நீண்ட நெடிய மரபில் வந்த கவிஞர்களுள் ஒருவர்; இவர் கவிதைகள் இதன் சாரம் பொதிந்தவை.

( விரைவில் வெளிவர இருக்கும் பழநிபாரதியின் வனரஞ்சனி
புதிய கவிதைத் தொகுதியின் அணிந்துரையிலிருந்து… )

– விக்ரமாதித்யன்

Leave a Response