அய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார் – பழனிபாரதி இரங்கல்

எழுத்தாளர் மா.அரங்கநாதன் 16-4-2017 புதுச்சேரியில் காலமானார்.

“வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியவர்.

இவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

“முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் அரங்கநாதனுக்கு உண்டு. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர் அரங்கநாதன். நீதிபதியும் ஆன்மிகப் பேச்சாளருமான ஆர். மகாதேவன் இவரது புதல்வர். அவரது இறுதிச் சடங்கு புதுவையில் இன்று மாலை (17-4-2017) 4-00 முதல் 6.00 மணிக்குள்ளாக நடைபெறுகிறது.

மறைந்த எழுத்தாளருக்கு பாவலர் பழனிபாரதி எழுதியுள்ள இரங்கற் குறிப்பு…

அய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார்.
தொன்னூறுகளில் ‘முன்றில்’ பதிப்பகத்தில் அவரை நான், எஸ்.சண்முகம், ‘நிழல்’ திருநாவுக்கரசு, ஆசு அடிக்கடி சந்தித்து உரையாடி இருக்கிறோம்.
‘பொருளின் பொருள்’ என்று கவிதையின் மெய்ப்பொருள் குறித்து நிறைவாக எழுதியவர்…

புதுமைப்பித்தன், மௌனியின் தொடர்ச்சியாக; தமிழின் நீண்ட மரபில் காலூன்றி; புதிய சோதனை முயற்சிகளோடு முன்னும் பின்னுமான காலத்தை நிகழில் நிறுத்திய சிறுகதையாளர்…

அமைதியும் ஆழமுமானவர்…
அவ்வாறே உறைந்துவிட்டார்.

Leave a Response