தீ பறக்க முட்டிப்பாரு, திமில நீயும் தொட்டுப்பாரு – ஜல்லிக்கட்டின் பெருமை பேசும் படம்

ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “இளமி” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் “சாட்டை” படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார்.மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.அதற்கான தேர்வு நடைப்பெற்றுக் கொண்டிருகிறது.

பழனிபாரதி, ஜீவன்மயில், ராஜாகுருசாமி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு – யுகா / கலை – ஜான்பிரீட்டோ / தயாரிப்பு மேற்பார்வை – ரவி

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ்.இவர் இயக்குனர் ரவிமரியாவின் உதவியாளர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்….

இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி நானூறு வருடங்களுக்கு முன்பு இல்லை. மாட்டை ஓடவிட்டு பின்னால் ஓடி அடக்குவது இப்போதைய ஜல்லிக்கட்டு. நானூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டுக்கு பேர் வடம் ஜல்லிக்கட்டு. சீறி வரும் காளையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு. அதைத் தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

திரிலிங்கான சம்பவங்களுடன் திரைக்கதை பரபரப்பாக அமைக்கப்பட்டு படமாகப் பட்டுள்ளது.

“ தீ பறக்க முட்டிப் பாரு
திமில நீயும் தொட்டுப் பாரு
எங்க ஊரு ஜல்லிக்கட்டு
எதிர நின்னு மல்லுக்கட்டு “

என்ற ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் காட்சி ஒன்று தேனி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. யுவன், அனு கிருஷ்ணா, வில்லனாக நடிக்கும் கல்லூரி அகில் உட்பட பல நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

நாம யாரும் பாத்திராத, கேட்டிராத புது மாதிரியான ஜல்லிக்கட்டை இளமியில் பதிவு செய்திருக்கிறோம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

என்று சொல்கிறார்.

Leave a Response