பாஜகவின் 27 வேட்பாளர்கள் அறிவிப்பு – அண்ணாமலைக்கு இடமில்லை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்விவரம்…

1.ஆவடி – இராஜசிம்ம மகேந்திரா,2.மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தரராஜன்,3.தளி – நாகேஷ்குமார்,
4.திருவண்ணாமலை – ஏழுமலை,5.இராசிபுரம் (தனி) – பிரேம்குமார்,6.மொடக்குறிச்சி – கிருத்திகா சிவக்குமார்,
7.உதகை – போஜராஜன்,8.அவிநாசி (தனி) – எல்.முருகன்,9.திருப்பூர் தெற்கு – தங்கராஜ்,10.கோவை வடக்கு – வானதி சீனிவாசன்,11.திருவாரூர் – கோவி சந்துரு,12.தஞ்சாவூர் – முருகானந்தம்,13.கந்தர்வகோட்டை (தனி)- உதயகுமார்,14.புதுக்கோட்டை – இராமச்சந்திரன்,15.அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்,16.திருப்பத்தூர் – திருமாறன்,
17.மானாமதுரை (தனி) – பொன் பாலகணபதி,18.மதுரை தெற்கு – இராமசீனிவாசன்,19.சாத்தூர் – நயினார் நாகேந்திரன்,20.இராமநாதபுரம் – நாகேந்திரன்,21.திருச்செந்தூர் – இராதாகிருஷ்ணன்,22.வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி,23.ராதாபுரம் – பாலகிருஷ்ணன்,24.நாகர்கோவில் – காந்தி,25.குளச்சல் – சிவக்குமார்,
26.பத்மநாபபுரம் – ரமேஷ்,27.விளவங்கோடு – விஜயதாரணி

இந்தப்பட்டியல் வெளியானதும் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.

அண்ணாமலை, மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.அதோடு அவர் பரிந்துரை செய்த அவருடைய ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.இதனால் அவர்கள் கடும்அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response