
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில், திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே,மருத்துவர் இராமதாசு தரப்பு பாமகவும், சசிகலா தொடங்கிய புதியகட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளன.
இந்தக் கூட்டணி சார்பாக இராமதாசு பாமகவினர் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை அறிவித்துவருகிறார் மருத்துவர் இராமதாசு.
மார்ச் கடையில் ஐந்து பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மருத்துவர் இராமதாசு, இரண்டு நாட்களுக்கு முன்னர் 10 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலை அறிவித்தார்.
அந்தப் பட்டியலில்,1.திருப்போரூர் தொகுதி-ஏகாம்பரம்,2.உத்திரமேரூர் தொகுதி- ஸ்ரீதர்,3.கும்மிடிப்பூண்டி தொகுதி- சங்கர்,4.திருவள்ளூர் தொகுதி-வெங்கடேசன்,5.செஞ்சி தொகுதி-கனல் பெருமாள்,6.தர்மபுரி தொகுதி- சரவணன், 7.ஜெயங்கொண்டம் தொகுதி- காடுவெட்டி ரவி,8.செய்யாறு தொகுதி- சீனிவாசன்,9.அந்தியூர் தொகுதி-கோபால், 10.புவனகிரி தொகுதி-பாலமுருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,9 தொகுதிகளுக்கான இராமதாசு பாமகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1.அணைக்கட்டு தொகுதி – வி.எஸ்.வெங்கடேஷ்,2.ஆற்காடு தொகுதி – பி.என்.ஜே.அஜய்ராஜ்,
3.அரக்கோணம் தொகுதி – மா.வெற்றிவேல்,4.கீழ்வேளூர் தொகுதி – வேத.முகுந்தன்,5.சோளிங்கர் தொகுதி- மு.விஜயன்,6.திட்டக்குடி தொகுதி – கருப்பன் மாணிக்கம்,7.ஆரணி தொகுதி – வீ.கலைமணி,8.கீழ்பெண்ணாத்தூர் தொகுதி – இரா.ஜானகிராமன்,9.ஓமலூர் தொகுதி – செ.சுரேஷ்குமார்
ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மாலையில் அவர் வெளியிட்ட 4 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதன் விவரம்…
1.மேட்டூர் – கே.வி.துரைராஜ்,2.செங்கம் – குயிலம் செல்வம், 3.சங்ககிரி – ஏ.ஆர்.பச்சமுத்து,4.கலசப்பாக்கம் -ம.சுமன்,5.வாணியம்பாடி – ப.அன்பரசு,6.போளூர் – ரா.மணிகண்டன்,7.கடையநல்லூர் – பா.சிங்கராயன்,
8.திருநெல்வேலி – சிங்கப்பூர் கண்ணன்.
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
