
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த்.இவர் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.விஜய்யுடன் பல்லாண்டுகள் பயணித்துவரும் அவருக்குக் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கினார் விஜய்.
ஆனால், அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளாமல், தொடக்கத்திலிருந்தே விஜய் பெயரை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்,
கட்சி நிர்வாகம் மொத்தமும் அவரிடம் இருந்ததால், எல்லாச் செலவுகளையும் அவரே செய்வாராம். பத்து ரூபாய் செலவாகும் வேலைக்கு நூறு ரூபாய் செலவு என்று கணக்கு கொடுப்பாராம்.அவருக்கு கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட வெங்கட்ராமனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து பெரும் தொகையைக் கையாடல் செய்கிறார்கள் என்கிற செய்தி வெளிப்பட்டவுடன், துணைப் பொருளாளராக விஜய்க்கு நம்பிக்கையான ஜெகதீஷ் நியமிக்கப்பட்டாராம்.
அதன்பின்னும் கையாடல் குறைய்வில்லை.ஜெகதீஷும் அவர்களுடன் உடன்பட்டுப் போய்விட்டார் என்று சொல்லப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக் கொண்டிருந்த இந்தத் தகவல், கரூர் நேர்ச்சிக்குப் பிறகு பெரிதாக வெளியே தெரியத் தொடங்கிவிட்டது.
எப்படியெனில்? கரூர் நேர்ச்சிக்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் தலைமறைவாக இருந்த காலத்தில் அடுத்த நிலையில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிய நேரத்தில் அவர் குறித்து பணம் கையாடல் உட்பட பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியே வந்திருக்கின்றன.
அவற்றை விஜய்யிடம் சொல்லக்கூட வாய்ப்பில்லை எனும் நிலை அங்கே இருந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தத் தகவல்களை அறிந்த விஜய்யின் விசுவாசிகள் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகரை நிர்வாகத்துக்குள் கொண்டு வந்தால் இங்கு நடக்கும் தவறுகள் சரியாகும் என்று நினைத்து அந்த வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.
அதேசமயம், இந்தத் தகவல்களை அறிந்த ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் பற்றிய எல்லாத் தகவல்களையும் விஜய்யிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.அதுவரை புஸ்ஸி ஆனந்த் கையாடல் செய்த தொகை பல கோடிகள் என்று சொல்லப்படுகிறது.அவற்றைக் கேட்டு விக்கித்துப் போய்விட்டாராம் விஜய்.
அதன்பின், எல்லாப் பொறுப்புகளையும் ஆதவ் அர்ஜுனாவையே பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது, ஒரு ரூபாய் செலவு என்றாலும் அது ஆதவ் அர்ஜுனா மூலமே நடக்கிறதாம்.அதேநேரம், மாவட்ட்ச் செயலாளர்கள் எல்லோரும் புஸ்ஸி ஆனந்தின் ஆட்கள் என்பதால் அங்கெல்லாம் புஸ்ஸி ஆனந்த் சொல்வதுதான் நடக்கிறதாம்.
இதனால் தன் முகத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி, தன் கையில் இல்லை என்பதை அறிந்த விஜய் மிகவும் நொந்துபோவிட்டாராம்.
இப்போது கொஞசம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சரி செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.


