அண்ணாமலை சந்திப்பை உறுதிப்படுத்திய டிடிவி.தினகரன்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி இடம்பெற்று, தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் ஆகிய போட்டியிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என தீர்க்கமாக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த தினகரன், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அப்போது அண்ணாமலை தங்களை சரியாக நடத்தியதாகப் பாராட்டிய தினகரன், நயினார் நகேந்திரன் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கியிருந்தார்.

இந்தச் சூழலில், சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் இல்லத்தில், அவரை அண்ணாமலை செப்டம்பர் 21 இரவு சந்தித்தார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமாறு அண்ணாமலை அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தச் சந்திப்பின்போது தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகாரபூர்வமற்ற தகவலாக வெளியே வந்தது.

இந்நிலையில், நேற்று காலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றிய அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார்.அந்தக் கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய டிடிவி.தினகரன்,இவ்வளவு நாள் இல்லாமல் நேற்று திடீரென பிரதமர் மோடியைப் பாராட்டியுள்ளதால், அண்ணாமலை டிடிவி.தினகரன் சந்திப்பு நடந்தது இதன் மூலம் உறுதியாகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response