சீமான் குற்றவாளியா? கிருஷ்ணகிரியில் நடந்ததென்ன?

இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின்
கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் ஆக இருந்த கரு.பிரபாகரன் செய்தியாள்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

நான் உட்பட ஊத்தங்கரை தொகுதிச் செயலாளர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதிச் செயலாளர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்டச் செயலாளர் காசிலிங்கம், ஒன்றியச் செயலாளர் செல்வா உட்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி உள்ளோம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இக்கட்சி, 2019 க்கு பின்னர் மாறிவிட்டது. மாநில பொறுப்பாளர்கள் பலர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர்; பலர் வெளியேறினர்.மதுரை, சென்னை, சேலம், தஞ்சை, ராமநாதபுரம் பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.

என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக அம்மாவட்ட அரசியலாளர்களிடம் விசாரித்தபோது,

கரு.பிரபாகரன் உள்ளிட்டோர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தெரிவித்தனர்.

அவற்றின் விவரம்…

அண்மையில் பெரும் சர்ச்சையில் சிக்கி மறைந்துபோனவருடன் இவர் மிக நெருக்கமாக இருந்து அவருடைய குற்றச் செயல்களிலும் பங்கெடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு ஏதாவதொரு காரணம் சொல்லி வசூல்வேட்டையில் ஈடுபடுவதிலும் அவர் வல்லவர் என்கிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்குவாரிகள் உட்பட பல கனிமவள தொழிலகங்கள் உள்ளன. அவர்களிடம் பணம் வசூலிப்பதையே முழுநேர வேலையாக வைத்திருந்தார் என்றும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் போது அமைச்சரவையில் நான் இருப்பேன். நான்தான் கனிமவள அமைச்சர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டவராம்.

அவருடைய நெருங்கிய நண்பர்களிடம், கனிமவள அமைச்சரே என்று கூப்பிடச் சொல்லிப் பழக்கப்படுத்தியிருக்கிறார்.

இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தலைமைக்குப் பலமுறை புகார் செய்துள்ளனர். அவற்றின் உண்மைத்தன்மையை விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே அவரை ஒதுக்கி வைத்து ஒழுங்குநடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியில் நிர்வாக ரீதியாக சில குறைபாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதனால் இவர் நல்லவர் என்று ஆகிவிடாது. இவர் தொடர்ந்து இருந்திருந்தால் கட்சிக்குக் கெட்டபெயர் அதிகரித்திருக்கும். இப்போது அந்த ஆபத்திலிருந்து கட்சி தப்பியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும் என்று பொதுவானவர்கள் சொல்கின்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டனர் இதனால் கட்சிக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது என்று அக்கட்சியினர் சொல்கின்றனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பொதுவெளியில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதால் சீமான் குற்றவாளி என்று செய்தி பரப்பப்படுகிறது.அவற்றைத் தன் செயல்களால் உடைத்தெறிந்து முன்னேறுவார் எங்கள் அண்ணன் எனப்பெருமிதம் பொங்கச் சொல்கின்றனர் நாம்தமிழர் தம்பிகள்.

Leave a Response