குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட இல்லை தமிழ்நாட்டில் 67 ஆ? – மோடிக்குக் கேள்வி

தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் வரி வசூல் மையங்கள் அமைத்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய அரசு.அடிக்கடி கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது……

திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் 67 டோல்கேட்டினை அமைத்துள்ளது.தற்போது புதியதாக மேலும் மூன்று டோல்கேட் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தமிழ் நாட்னு மக்களுக்கு டோல்கேட் கட்டண வரியை 17 விழுக்காடு உயர்த்தியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

தமிழ் நாட்டில் 67 டோல்கேட் அமைத்துள்ள ஒன்றிய அரசு குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட ஏன் அமைக்கவில்லை?

அண்டை மாநிலமான கேரளாவில் 5, மகாராஷ்டிராவில் 44 டோல்கேட்டுகள் உள்ளன.

தனது மாநிலத்தில் டோல்கேட்டே இல்லாத நிலையில் பிரதமர் மோடி, தமிழ் நாட்டுக்கு மட்டும் ஏன் 67 டோல்கேட்கள் அமைத்துள்ளார்? இவற்றைத் திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு அவர் போர்க்குரல் எழுப்பியுள்ளார்.

Leave a Response