மோடி அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு – முழுவிவரம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் பாஜக ஆட்சியமைத்துள்ளது.

ஜூன் 9 அன்று டெல்லியில் நடந்த விழாவில் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையில் 71 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

வழக்கமாக பதவியேற்பு நடந்தவுடனே அமைச்சர்கள் இலாகா விவரம் வெளியாகும். ஆனால் இப்போது சுமார் 24 மணி நேரம் கழித்து அவ்விவரங்கள் ஜூன் 10 மாலை வெளியானது.

அவற்றின் விவரம்….

▪️ ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு

▪️ அமித்ஷா – உள்துறை

▪️ ஜே.பி.நட்டா – சுகாதாரம், இரசாயனங்கள்

▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் – வேளாண், ஊரக வளர்ச்சி

▪️ மனோகர் லால் கட்டார் – மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி

▪️ நிர்மலா சீதாராமன் – நிதி

▪️ ஜெய்சங்கர் – வெளியுறவு

▪️ அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி

▪️ மன்சுக் மாண்ட்வியா – தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு

▪️ ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

▪️ ஜித்தன் ராம் மஞ்சி – சிறு குறு நடுத்தர தொழில்கள்

▪️ தர்மேந்திர பிரதான் – கல்வி

▪️ குமாரசாமி – இரும்பு, கனரகத் தொழில்கள்

▪️ ராம்மோகன் ராயுடு – விமானப் போக்குவரத்து

▪️ பியூஷ் கோயல் – வணிகம் மற்றும் தொழில்துறை

▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்

▪️ சர்பானந்த சோனோவால் – கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்

▪️ வீரேந்திர குமார் – சமூக நீதி

▪️ அன்னபூர்ண தேவி – மகளிர், குழந்தைகள் மேம்பாடு

▪️ கிரண் ரிஜிஜு – நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்

▪️ சி.ஆர்.பாட்டீல் – ஜல் சக்தி

▪️ ப்ரகலாத் ஜோஷி – நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

▪️ கிரிராஜ் சிங் – ஜவுளி

▪️ ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நல விவகாரம்

▪️ ஜோதிர்த்தியா சிந்தியா – கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்

▪️ பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம்

▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

▪️ கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்

▪️ சிராஜ் பஸ்வான் – உணவு பதப்படுத்தும் தொழில்கள்

தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவிகள் & இலாகாக்கள்

ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை, திட்டமிடல் துறை

ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை

அர்ஜுன் ராம் மேக்வால்- சட்டம் மற்றும் நீதி துறை

பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்- ஆயுஷ் துறை

ஜெயந்த் சவுத்ரி- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை

இணை அமைச்சர்கள் & இலாகாக்கள்

ஜிதின் பிரசாத் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை (இணை அமைச்சர்)

ஸ்ரீபாத் நாயக்- மின் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (இணை அமைச்சர்)

பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை (இணை அமைச்சர்)

கிரிஷன் பால் குர்ஜார்- கூட்டுறவுத்துறை (இணை அமைச்சர்)

ராம்தாஸ் அத்வாலே- சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் (இணை அமைச்சர்)

ராம் நாத் தாக்கூர்- வேளாண் துறை (இணை அமைச்சர்)

நித்யானந்த் ராய்- உள் துறை (இணை அமைச்சர்)

அனுப்ரியா பட்டேல்- சுகாதார துறை, கெமிக்கல் துறை (இணை அமைச்சர்)

வி சோமண்ணா- ஜல்சக்தி, ரயில்வே துறை (இணை அமைச்சர்)

டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி- ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்பு துறை (இணை அமைச்சர்)

எஸ்பி சிங் பாகேல்- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை, பஞ்சாயத்து ராஜ் துறை (இணை அமைச்சர்)

ஷோபா கரந்த்லாஜே- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (இணை அமைச்சர்)

கீர்த்தி வர்தன் சிங்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத் துறை (இணை அமைச்சர்)

பிஎல் வர்மா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (இணை அமைச்சர்)

சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்து (இணை அமைச்சர்)

சுரேஷ் கோபி- பெட்ரோலியத்துறை, சுற்றுலாத்துறை (இணை அமைச்சர்)

எல்.முருகன்- தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை (இணை அமைச்சர்)

அஜய் தம்தா – சாலை போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)

பாண்டி சஞ்சய் குமார்- உள்துறை (இணை அமைச்சர்)

கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சித் துறை (இணை அமைச்சர்)

பகீரத் சவுத்ரி- வேளாண் துறை (இணை அமைச்சர்)

சதீஷ் சந்திர துபே- நிலக்கரி துறை, சுரங்கத்துறை (இணை அமைச்சர்)

சஞ்சய் சேத்- பாதுகாப்பு துறை (இணை அமைச்சர்)

ரவ்னீத் சிங் பிட்டு- உணவு பதப்படுத்துதல், ரயில்வே துறை (இணை அமைச்சர்)

துர்கா தாஸ் உய்கே – பழங்குடியினர் விவகாரத் துறை (இணை அமைச்சர்)

ரக்ஷா காட்சே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

சுகந்தா மஜும்தார்- கல்வித்துறை, வடகிழக்கு விவகாரங்கள் துறை

சாவித்ரி தாக்கூர்- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

டோகன் சாஹு- நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை (இணை அமைச்சர்)

ராஜ்பூஷன் சவுத்ரி- ஜல்சக்தி துறை (இணை அமைச்சர்)

பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா- கனரக தொழில்துறை, இரும்பு துறை (இணை அமைச்சர்)

ஹர்ஷ் மல்ஹோத்ரா- சாலை போக்குவரத்து துறை, கார்பரேட் விவகாரங்கள் துறை (இணை அமைச்சர்)

நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை (இணை அமைச்சர்)

முரளிதர் மோஹோல்- கூட்டுறவுத்துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)

ஜார்ஜ் குரியன்- சிறுபான்மையினர் விவகாரத் துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை (இணை அமைச்சர்)

பபித்ரா மார்கெரிட்டா- வெளியுறவுத்துறை, ஜவளித்துறை (இணை அமைச்சர்)

Leave a Response