தொலைந்த கைபேசியைக் கண்டுபிடிக்க புதியவசதி – ஒன்றிய அரசு செயலாக்கம்

தொலைந்த மற்றும் திருடப்பட்ட கைபேசிகளை மீட்பது பெரிய சிக்கல். இப்போது அதை எளிதாக்கவுள்ளது ஒன்றிய அரசு.

திருடப்பட்ட, தொலைந்த கைபேசிகளை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. டெல்லி, மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் இந்த வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது நாளை முதல் ஒன்றியம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த வசதி மூலம், கைபேசிகள திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறியவும் முடியும்.

கைபேசி தொலைந்து விட்டால், சிஇஐஆர் இணைய சேவை மூலமாக மீட்க, புகாரளித்த எப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், ஐஎம்இஐ(IMEI) எண்கள், திருடப்பட்ட இடம், கைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் கைபேசி முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response