பழனிமலையில் புதியவிதி – இன்றுமுதல் அமல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கைபேசி மற்றும் காணொலிக் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் கைபேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைபேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி,அடையாளச் சீட்டு பெற்றுக்கொண்டு கைபேசியை இங்கு வைத்துச் செல்லாலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில்களுக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆலய நிர்வாகம் சார்பில் கைபேசிகளைப் பாதுகாக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாமி தரிசனம் முடிந்த பின்னர் கைபேசிகளை பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம், காணொலி எடுக்கக்கூடாது என்பதற்காகவே கைபேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வச் சிலைகளின் புகைப்படங்கள், காணொலிகள் வெளியாகின்றன.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் கைபேசி பயன்படுத்த தடை விதித்தார். அதோடு கோயிலில் கைபேசி பயன்படுத்தினால் அதைப் பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தியவர்களிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

Leave a Response