கச்சத்தீவில் மதக்கலவரம் – சிங்களர்களுக்கு திருமா கடும்எதிர்ப்பு

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவிய சிங்களர்களுக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போதுவரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது,

ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

எனக்குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்

தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விசிக

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response