சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்லி இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டது.
இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணேய் விலை குறைந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 76.82 டாலராக சரிந்துள்ளது.
நியூயார்க் எண்ணெய்ச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 71.59 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் உட்சபட்ச விளையான 129 டாலரில் இருந்து 53 டாலர்கள் சரிந்து 76 டாலருக்கு வந்துள்ளது. இரு பீப்பாய் பிரன்ட் கச்சா எண்ணெய் 76 டாலர் என்பது இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையாகும்
சர்வதேசச் சந்தை விலையை ஒட்டியே இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.