இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மூத்த காங்கிரசு தலைவர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது…..
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் மோடி அரசின் நடவடிக்கை என்பதற்கு இது சான்றாகும். இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்த அறிக்கையை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிராகரிக்கவே செய்வார்கள். மோடி அரசுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான இந்த மோதல் ஒட்டுமொத்த நாட்டையே நாசமாக்கிவிடும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.