கொரோனா ஊரடங்கில் 3 புதிய கட்டுப்பாடுகள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்ட முடிவுகளில் முதன்மையானவை…..

தமிழ்நாடு முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. அந்த இரவு நேர ஊரடங்கு சனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

16.01.2022 ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்

இவற்றைத் தாண்டி கொரோனா காலக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம்போல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response