எரிவாயு உருளை விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி

ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், அவ்வப்போது சமையல் எரிவாயு உருளை விலையையும் உயர்த்திவருகிறார்கள்.

ஜூலை மாதம் ரூ.825.50காசுகளில் இருந்து ரூ.850.50 காசுகளாக விலை உயர்த்தப்பட்டது.

அதன்பின் இன்று முதல், தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர். சுமைக்கு மேல் சுமையைச் சுமத்துகிறார்களே என்று மக்கள் அதிர்ந்துபோயிருக்கின்றனர்.

Leave a Response