கொரோனா நெருக்கடியில் மக்கள் சிக்கிச் சீரழிஅது கொண்டிருக்கும் நேரத்திலும், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு இலிட்டர் பெட்ரோல் ரூ.98.88-க்கும், ஒரு இலிட்டர் டீசல் ரூ.92.89-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை இலிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.99.19-க்கும், டீசல் விலை இலிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.93.23-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து விலையை உயர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.