சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருந்தது.
இதன் பின்னர், தமிழகம் உட்பட 5 மாநிலத் தேர்தல் நடந்த நேரத்தில் விலை சற்று குறைந்தது.
தேர்தல்கள் முடிந்த பின்னர் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.
நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.23 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. பெரும் பணக்கார்ரகளுக்காக மட்டுமே மோடி சிந்திக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
இதனால், மோடி மீது வெகுமக்கள் கடுங்கோபத்தில் சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.