மருத்துவர் இராமதாசு கருத்துக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்பு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…

பண்டைய தமிழகம் வேளிர்களாலும், மூவேந்தர்களாலும் ஆளப்பட்ட பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே நாடாக என்றும் வாழ்ந்ததில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் அடங்கிய பகுதிகளோடு தமிழ்நாடும் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணமாக விளங்கி வந்தது.

1956 ஆம் ஆண்டு மொழிவழி மாநிலப் பிரிவினையின் போதுதான் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் முதன்முதலாக உருவாயிற்று. தமிழ்ப்பேசும் மக்கள் அடங்கிய ஒரே மாநிலமாக அப்போதுதான் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

ஆனால், இதைச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும் என சிலர் கூறுவது தமிழரின் ஒற்றுமையைச் சிதைப்பதாகும். இத்தகையப் போக்குக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்மையில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

Leave a Response