வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு – உ.பி பாசக பெண் தலைவர் பதவிவிலகல்

பாசக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டம் 2020 விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஐந்து மாதங்கள் இந்திய தலைநகரான தில்லியில் ஒட்டு மொத்த விவசாயிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கியது. பின்னர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் குரலெழுப்பினர்.

வேளாண்சட்டங்களுக்கு எதிராகக் குரலெழுப்பி வந்தவர்களில் ஒரு குரலாக உத்தர பிரதேச பாசக தலைவர் பெண்கள் ஆணைய உறுப்பினர் பிரியம்வதா தோமரின் குரலும் இருந்து வந்துள்ளது.அவர் குரலுக்கு மதிப்பில்லை.

இந்நிலையில் நேற்று பாசக தலைவர் பிரியம்வதா தோமர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் சுவாதந்திரதேவ் சிங்கிற்கு பிரியம்வதா எழுதிய கடிதத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்துவருகிறது. இது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மட்டும் எதிரானது அல்ல, எனது கொள்கைகளுக்கு எதிரானவை. எனவே ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response