தமிழக வாக்குப்பதிவு முழுவிவரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஏப்ரல் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, ‘‘தமிழகத்தில் மொத்தம் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. இது இறுதி நிலவரம் ஆகும். அதிகப்பட்சமாக கரூரில் 83.92 விழுக்காடு வாக்குகளும், குறைந்த அளவாக சென்னையில் 59.06 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாகக் கூறினார்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள நேரத்தில் 73 விழுக்காடு வாக்குப்பதிவு என்பது நல்ல முன்னேற்றம் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,09,23,651 பேரும், பெண் வாக்காளர்கள் 3,19,39,112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தும் நேற்று 72.78 விழுக்காடு பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 4 கோடியே 57 லட்சத்து 56 ஆயிரத்து 753 பேர் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 202 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதேபோன்று, மிகக் குறைந்த அளவாக சென்னையில் 59.06 விழுக்காடு மட்டுமே வாக்களித்துள்ளனர். சுமார் 41 விழுக்காடு வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் 40,57,061 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால் 23 லட்சத்து 96 ஆயிரத்து 100 பேர் வாக்களித்துள்ளனர். 16 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் வாக்களிக்கவில்லை. சென்னையில் மட்டும் ஒவ்வொரு தேர்தலிலும் 60 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

மாவட்டம் வாரியாக வாக்குப்பதிவு விழுக்காடு விவரம்
……………………………………………….

சென்னை 59.06
திருவள்ளூர் 70.56
காஞ்சிபுரம் 71.98
வேலூர் 73.73
கிருஷ்ணகிரி 77.30
தர்மபுரி 82.35
திருவண்ணாமலை 78.62
விழுப்புரம் 78.56
சேலம் 79.22
நாமக்கல் 79.72
ஈரோடு 77.07
நீலகிரி 69.68
கோவை 68.70
திண்டுக்கல் 77.13
கரூர் 83.92
திருச்சி 73.79
பெரம்பலூர் 79.09
கடலூர் 76.50
நாகப்பட்டினம் 75.48
திருவாரூர் 76.53
தஞ்சாவூர் 74.13
புதுக்கோட்டை 76.41
சிவகங்கை 68.94
மதுரை 70.33
தேனி 71.75
விருதுநகர் 73.77
ராமநாதபுரம் 69.60
தூத்துக்குடி 70.20
நெல்லை 66.65
கன்னியாகுமரி 68.67
அரியலூர் 82.47
திருப்பூர் 70.12
கள்ளக்குறிச்சி 80.14
தென்காசி 72.63
செங்கல்பட்டு 68.18
திருப்பத்தூர் 77.33
இராணிப்பேட்டை 77.92

Leave a Response