அமைச்சர் வேலுமணியை அலறவைக்கும் கோவைக்கான திமுகவின் பிரத்யேக வாக்குறுதிகள்

தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் வேட்பாளர்களின் சிலரை முகநூல் பக்கத்தில் அறிமுகம் செய்வது ஓர் வாக்காளனின் கடமையாகக் கருதுகிறேன்!

மேற்கு மலையோரமுள்ள “தொண்டா முத்தூர்”தொகுதியில் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்ப்பில் தி.மு.க வேட்பாளராக தேர்தல் களமாடும் திரு: ” கார்த்திகேய சிவ சேனாபதி ” தன்னை எதிர்த்துப்போட்டியிடும் அமைச்சர் திரு : எஸ். பி. வேலு மணியை கலக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்!

தொகுதியின் தகுதி வாய்ந்த வேட்பாளர் என்று கட்டியம் கூறும் வகையில் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட பகுதிக்கு என்றே தனித்துவமான தேர்தல் அறிக்கையை முன் மொழிந்து மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்.

இந்த அறிக்கை பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது! அறிக்கையின் குறிப்பிட்டு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தாலும் என்னை கவனப்படுத்திய செய்திகளைப்பகிர்ந்து கொள்கிறேன்!

* நொய்யல் நதியின் சூழலியல் பாதிக்காத வாறு அறிவியல் பூர்வமாக மேம்படுத்துவது.

* கோவையின் முதன்மையான நீர் ஆதாரங்களாக விளங்கும் உக்கடம் பெரிய குளம், குறிச்சிக்குளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், முத்தண்ணன் குளங்களுக்கு வரும்சுத்திகரிக்காத கழிவு நீரை தடுப்பது. கழிவு நீர் மறுசுழற்சி, மறு பயன்பாடு, நீர்சேமிப்பு, போன்ற இன்றியமையாத இயற்கை வளப்பாதுகாப்பில் ஈடுபடுவது, குளக்கரையில் கான் கிரீட் தளத்தை தடை செய்து இயல்பாக வளரும் தாவரங்களைப்பாதுகாப்பது,

* அ.தி.மு.க ஆட்சியில் தனியார் மயம் ஆக்குவதற்காக “சூயஸ்” நிறுவனத்தோடு செய்து கொண்ட உடன் படிக்கையை விலக்கிக் கொள்வது போன்ற உறுதி மொழிகள் கோவையின் பறிபோகும் இயற்கைவளங்களை பாதுகாக்க உதவும்.

*காட்டுயிர்கள் – மனித எதிர்கொள்ளல் போன்ற சூழலியல் சிக்கலுக்கு உரிய நடவடிக்கைககளை அறிவியல் பூர்வமாகவும், அறவியல் பூர்வமாகவும் கையாளப்படும் என்ற முன்னெடுப்புகள் உள்ளபடியே இயற்கையாளர்களை,சமூக ஆர்வலர்களை, சூழலியலாளர்களை கவனம் பெறச்செய்துள்ளன.

*கோவை குற்றாலம், தொள்ளாயிரம் மூர்த்திகண்டி அணை ( வைதேகி நீர் வீழ்ச்சி) போன்ற இடங்களில் மேம்பட்ட சூழல் சுற்றுலாவை கொண்டு வருவது, மேற்கு மலையடிவாரத்தில் வாழும் பட்டியலினத்தவர், பழங்குடிகளுக்கு இதுவரை வழங்கப்படாத வீட்டு மனைப்பட்டா வழங்குவது,படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி மலைவாழ் மக்களுக்கு எளிதாக மருத்துவம் கிடைக்கச்செய்வது,

* அனைவருக்குமான. அடிப்படை உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மையை நிலைநாட்டி எவ்வித பாகு பாடும் பார்க்காமல் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று உறுதியளித்து ” உதய சூரியன் ” சின்னத்தில் வாக்கு கேட்டு வருகிறார். தொகுதி நலனில் அக்கறையுள்ள, மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் இவரை வெற்றி பெறச் செய்யவேண்டும்!

– கோவை சதாசிவம்
(எழுத்தாளர்)

Leave a Response