தினகரன் என்ன முடிவெடுப்பாரோ? – அஞ்சும் அதிமுக

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று சசிகலா அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல தரப்பினரும், இதற்காகவா பெங்களூருவிலிருந்து சென்னைக்கு 23 மணி நேரம் பயணம் செய்தீர்கள்? என்று விமர்சனம் செய்துவருகின்றனர்.

அதேசமயம், சசிகலாவின் அறிவிப்பை பாசக மட்டும் வரவேற்றுவருகிறது. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துவிட அவர்கள் முயற்சி எடுத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் அவரால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரியும் அது தாங்கள் இருக்கும் அதிமுக கூட்டணிக்குப் பாதகமாக அமையும் என்பதால் அவரை நிர்ப்பந்தம் செய்து ஒதுங்கல் அறிவிப்பை வெளியிட வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர் அப்படிச் சொல்லிவிட்டாலும் டிடிவி.தினகரன் என்ன செய்யப் போகிறார்? என்று தெரியாமல் தடுமாறுகிறதாம்
அதிமுக மற்றும் பாசக.

அவர், தனித்துப் போட்டி என்று சொல்லிவிடுவாரோ? அல்லது கமல் போன்றோருடன் கைகோர்த்து விடுவாரோ? என்றெல்லாம் நினைத்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம்.

அவர் அப்படி முடிவெடுத்தால் தென்மாவட்டங்களில் சுமார் அறுபது தொகுதிகளில் அதிமுகவின் நிச்சய தோல்விக்குக் காரணமாகிவிடுவார் என்பதால் இந்த அச்சம் என்கிறார்கள்.

Leave a Response