நெய்வேலியில் போட்டியிட வேல்முருகன் விருப்பம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அதன் நிறுவனர் வேல்முருகன் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது……

தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன.
ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளது.

தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துகளுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார்.பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் விமர்சித்து வந்தார்.அதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸ் உடன் சேர்கிறார்.

தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.

இவ்வாறு கூறினார் வேல்முருகன்.

Leave a Response