ராகுல் பிரியங்காவின் துணிச்சல் பயணம் – மோடி யோகிக்கு நெருக்கடி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலேயே நள்ளிரவில் தகனம் செய்தனர்.

அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

எங்கள் மகளின் உடலைக் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரினோம். ஆனால் அதனை ஏற்காமல், அவசர அவசரமாக அவளது சடலத்தை தகனம் செய்துவிட்டனர். அது மட்டுமின்றி, பிரேதப் பரிசோதனை அறிக்கையை கூட எங்களிடம் காட்டவில்லை.

எங்கள் வீட்டில் எந்நேரமும் காவல்துறையினர் இருக்கிறார்கள். வெளியே செல்வதற்குக் கூட அனுமதி மறுக்கின்றனர். மேலும், இந்த வழக்கை முடித்துக் கொள்ளுமாறு கிராம நிர்வாகமும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. எங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில் அக்குடும்பத்தினரைச் சந்தித்துப் பேச காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தி உள்ளிட்டோர் அக்டோபர் 1 ஆம் தேதி அங்கு சென்றனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை ராகுல்காந்தியை கீழே தள்ளிவிட்டனர். அதோடு அவர் மீது பொய்வழக்கும் போட்டு கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று ராகுல்காந்தியும் பிரியங்காகாந்தியும் மீண்டும் ஹத்ராஸ் சென்றனர்.இதன்மூலம்,

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை மூடிமறைக்க உபி அரசு, காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள்,
சாயம் வெளிறிவிட்டன.

இந்தப் பிரச்சனையில் மோடி மற்றும் யோகி ஆதித்தியநாத் இருவருக்கும் கடுமையான அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார்கள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.

அங்கு எஸ்.பி, டிஎஸ்பி போன்றோர் மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த வேளையில் உ.பி யோகி, ராகுல் இருவரின் அரசியல் பின்னணியைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

மோடியைப்போலவே முரட்டுத்தனம், மதவெறி, எதிர்ப்பவர்களை ரௌடித்தனத்தால் பணியவைப்பது யோகி ஆதித்தியநாத்துக்கு கைவந்த கலை.

உபி, கோரக்பூரை மையமாகக் கொண்டு ரௌடி அரசியல் செய்தவர் யோகி ஆதித்யநாத். கோரக்நாத் மடத்தின் பூசாறியாக இருந்தவர், எம்.பி யாக மாறியதன் பின்னணியில் காவியரசியலும் ரவுடித்தனமும் இணைந்திருக்கிறது.
பாஜகவுக்குள் விஹெச்பி, பஜ்ரங்தள், இந்து முன்னணி இப்படி நிறைய மதவெறி அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ‘ஹிந்து யுவ வாஹினி’ என்கிற அமைப்பு.

இதை நடத்தியவர் யோகி ஆதித்யநாத். எப்படி குஜராத்தை கலவரபூமியாக மாற்றி தேசிய அரசியலின் கவனத்தை மோடி ஈர்த்தாரோ, அப்படி உ.பியை கலவரக்காடாக மாற்றியவர் யோகி.

கலவரத்தைத் தூண்டுவது, கொலை, பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பது, அத்து மீறி பிரவேசிப்பது,அனுமதியின்றி கூட்டத்தைத் திரட்டுவது என்று இவர்மீது ஐம்பது கிரிமினல் வழக்குகளாவது இருக்கும்.

மோடியைத் தொடர்ந்து காவி பயங்கரவாதிகளின் தேசிய முகமாகக் காட்ட எல்லா தகுதியும் படைத்தவர்
யோகி ஆதித்யநாத்.

ராகுல், பிரியங்கா பின்னணி வேறு மாதிரியானது. இந்திராவிடம் நேரு ஸ்டைல் இல்லை. ராஜிவிடம் இந்திராவின் பாதிப்புகள் இல்லை. வாரிசுகளாக இருந்தாலும் இவர்கள் அரதியலில் தனித்தன்மை கொண்டிருந்தார்கள்.
ராகுலும் பிரியங்காவும் இப்படிதான். தனித்துவ அடையாளங்களோடு வளர்கிறார்கள். நேரு குடும்பத்துக்கு எந்த சாதி, மத அடையாளமும் இல்லை.

மோடி, யோகி போன்றோருக்கு மாற்றாக, சனநாய அடையாளம் இவர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.
ஆனால் இருவரிடமுமே active polytics இல்லை என்பதே குறைபாடு!

அது இந்த ஹத்ராஸ் வன்முறையில் மாறியிருக்கிறது.

மிகப்பெரிய கட்சி ஒன்றின் தலைவரை சாதாரண ஒரு போலீஸ் பிடித்து தள்ளுகிறார். இது மேலிடத்தின் உக்குவிப்பின்றி நடந்திருக்க வழியில்லை. பயமுறுத்திப் பணிய வைக்க நினைக்கும் ஃபாசிஸ அணுகுமுறை. ஆனால் ராகுலோ பிரியங்காவோ அஞ்சவில்லை.

மோதிலால் நேரு, நேரு (9 ஆண்டுகள் சிறைவாசம்) கமலா நேரு, இந்திரா என அனைவருமே சிறையில் இருந்தவர்கள்.

அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இரண்டாவது முறையாக ஹர்த்தீஸ் சென்றார்கள். ராகுலை வைத்து காரோட்டிச் சென்றார் பிரியங்கா.

இவர்களின் இச்செயல், புதிய தெம்பையும் நம்பிக்கையையும் இந்தியர்களுக்கு தந்துள்ளன.

வரும் நாட்களில் இந்த சகோதர சகோதரிகள் உறுதியோடு இணைந்து இவ்வாறு செயல்படுவார்களாயின், இந்தியாவில் மத ஃபாசிசத்தையும், மோடி, யோகி ஆதித்யநாத் வகையறாவின் வன்முறை அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்!

– கரிகாலன்

Leave a Response