சென்னையின் அடையாளமான சரவணா ஸ்டோர்சின் வயது 50

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதையொட்டி, ‘மக்களின் இதய மாளிகையில் இடம் கொடுத்தத்தற்கு நன்றி’ என்று அந்நிறுவணம் மனம் நெகிழ்ந்து கூறுகிறது.

“நம்பிக்கையைக் கொண்டாடுவோம்” இந்த வரிகளைச் சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான்.

நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக்க் கொண்டு பல சாதனைகளைப் படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது.

தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களைக் காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்துச் செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.

90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவர்களின் உழைப்பு எண்ணில் அடங்காதது. பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்தக
கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளாக்காட்சி.

வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த பொன்விழா ஆண்டில் பொன்னான நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியைச்சமர்பிக்கிறார்கள்.

இதன் வெற்றிப் பயணம் தொடரும்.

Leave a Response