செப்டெம்பர் 7 முதல் தமிழகத்தில் ஓடும் 10 ரயில்கள் இவைதான்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பேருந்து, தொடர்வண்டிகள் மற்றும் விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டன.

அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது.

வருகிற 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவர்த்து தொடங்க இருக்கிறது.

தொடர்வண்டிப் போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் சில எக்ஸ்பிரஸ் வண்டிகளை இயக்க முடிவு செய்து, அதற்காக ரெயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.

தெற்கு ரெயில்வேயின் இந்தக்கோரிக்கையை பரிசீலித்த ரெயில்வே வாரியம், தமிழகத்தில் 7 சிறப்பு ரெயில்கள் மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நேற்று அனுமதி வழங்கியது.

அதன்படி முதற்கட்டமாக,

1.சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், 2.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் -கோவை சேரன் எக்ஸ்பிரஸ்,
3.எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,
4.எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், 5.எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், 6.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ்

ஆகிய 6 எக்ஸ்பிரஸ் வண்டிகளை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியது. ‘

இந்த நிலையில், கூடுதலாக தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு வண்டிகளை ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :

சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில்கள்

திருச்சி – நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரயில் அறிவிப்பு

* இவற்றிற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது

Leave a Response