முருகன் தமிழ்க்கடவுள் என்றால் உடனே இதைச்செய்க – புதிய கோரிக்கை

கந்தசஷ்டிகவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளீயிட்ட காணொலியால் பலத்த சர்ச்சை உருவாகியுள்ளது. இந்துத்துவ அமைப்புகள் அதற்கு எதிராகப் பேசுகிற அதேநேரத்தில், இதுதொடர்பாக திராவிட இயக்கங்களும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் முரண்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், அதுகுறித்து தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பொழிலன் எழுதியுள்ள குறிப்புகள்….

தமிழர்களை உட்பகை படுத்துகிறது ஆரியப் பார்ப்பனியம்..
முருகனை ‘சுப்ரமணியன்’ -என்று பிராமணிய அடிமை என்பதாகச் சொல்லி இழிவுபடுத்தியவர்கள் பார்ப்பனர்கள்..
குறிஞ்சிநில வேலவனாகக் கருதப்பட்டவனை புராணக் கதை அளப்புகளுக்குள் அடக்கி.. ஸ்கந்தன், ஷரவணன் – என்றெல்லாம் புளுகி ஆரிய வருணாச்சிரமத்தின் வழி தமிழர்களை அடிமைப்படுத்திய ஆரியத்தை எதிர்க்காமல் தமிழினம் மீள முடியாது..
பார்ப்பனியமும் இந்தியமும் வல்லரசியமுமே தமிழர்களின் முதற்பெரும் பகை..
உட் சிதைவுற்ற தமிழ் இனத்தினை..ஒன்று சேர்ப்போம்..!

முருகனைத் தமிழ்க் கடவுள் என்று வணங்குகிற தமிழர்கள்
முருகனின் கோயில்களை ஆரியப் பார்ப்பனியர்களிடமிருந்து மீட்டாக வேண்டும்..
திருச்செந்தூர் கோயிலை முருகன் கோயில் எனக் கூறாமல் ‘சுப்பிரமண்யசுவாமி கோயிலாக்கி’யிருக்கும் பிராமணர்களை வெளியே விரட்டிவிட்டுத் தமிழர்கள் கைப்பற்றுவது எப்போது?

பழனி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் எனச் சொல்லப்படுகிற கோயில்களிலிருந்து பிராமணர்களின் அதிகாரத்தை விரட்டாமல் தமிழர்கள் கைப்பற்ற முடியுமா? தமிழில் வழிபடவும், குடமுழுக்கு செய்யவும் முடியுமா?

தமிழ்ச் சமயக் கருத்தாளர்கள் முன்னெடுத்துத்,தமிழ் உரிமைகளை,தமிழர் உரிமைகளை
நிலைநாட்ட வேண்டிய நேரம் இது..

முருகனைத் தன் பாட்டன், முப்பாட்டன் என்பதாக அடையாளப்படுத்தி
நீட்டி முழங்கும் இயக்கங்கள், கட்சிகள் எவையும் முருகனின் அறுபடை வீடுகள் என்று அறியப்பட்டிருக்கும் பழனி, திருச்செந்தூர், மருதமலை உள்ளிட்ட பெருங்கோயில்களிலிருந்து பிராமணப் புரோகித அர்ச்சகர்களை விரட்டிவிட்டுத் தமிழர் பூசாரிகளை அமர்த்தித் தமிழில் பூசைகள் செய்யும் உரிமைகளை நடைமுறைப்படுத்தும் திறன் இல்லாத நிலையிலேயே வெற்று முழக்கங்களிடுகின்றன.

இவ்வாறு பொழிலன் கூறியிருக்கிறார்.

Leave a Response