அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா? – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்

தமிழக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவரான மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்திகள் வருகிற நேரத்தில்,கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

என்று முதல்வர் எடப்பாடி பழனீச்சாமியின் ட்விட்டர் கணக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.அதோடு மேலே உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இரண்டு நிகழ்வுகளில் எது முதலில் நடந்தது? என்று தெரியாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response