6 நாட்களுக்கு மண்டல முறை இரத்து – முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு முன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன.

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் இன்று மாலை, முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மண்டலங்களுக்குள் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என்பது இரத்து செய்யப்படுகிறது. ஜூன் 25 முதல் 30 வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே இ பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

Leave a Response