ஜெ.அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில்,கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் திமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நாம்தமிழர்கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்….

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response