அமைச்சர்களே கமிஷன் வாங்கும் நேரம் இதுவல்ல – கமல் காட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இதனிடையே மாநிலங்கள் அளவில் பஞ்சாப், ஒடிசா, மகாஷ்டிரா, தெலங்கானா,மேற்கு வங்காளம் ஆகியவற்றில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், தமிழக அரசோ மத்திய அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்று தலைமைச்செயலாளர் மூலம் சொல்லிவிட்டது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…..

மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தன்னிச்சையாக முடிவெடுத்தபின் நீங்கள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனது மாண்புமிகு முதல்வரே? உங்கள் எஜமானரின் குரலுக்காகவா?

எனது குரல் மக்களினுடையது, அவர்களிடமிருந்து வருவது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள் முதல்வர் அவர்களே”

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஊரடங்கு நேரத்தில் ஏழை எளியவர்களுக்கு தன்னார்வலர்கள் அரசியல் கட்சிகள் நேரடியாக உணவு வழங்கக்கூடாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்….

அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response