தந்தி தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற ரங்கராஜ் பாண்டே அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தனியாக ஒரு இணையதள தொலைக்காட்சி நடத்தி வருகிறார்.
ஆரியர்களின் குறியீடான சாணக்யா என்கிற பெயரில் அவர் நடத்தும் வலைக்காட்சியின் ஆண்டுவிழா இன்று நடைபெறவிருக்கிறது.
அவ்விழாவில் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசியலில் நேர்மைக்கான விருது அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த விருது வேண்டாம்
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
போராட்டச் சமூகத்தின் முன்னோடியான அய்யா இரா.நல்லக்கண்ணு அவர்கள் இந்த விருதைப் புறக்கணிக்க வேண்டும்.
தன் சமரசமற்ற களப்பணிகளால் எங்களின் அடையாளமாக வாழ்கிற அய்யா, அரசியலில் நேர்மைக்கான சாணக்யா விருது என்ற தகுதியற்றவர்களிடமிருந்து பாராட்டைப் பெறுவது சரியல்ல.
கொள்கை வாழ்வில் முழுமையான பிடிப்பான தோழர் நல்லக்கண்ணு அய்யா,
அறமற்ற ரங்கராஜ் பாண்டே போன்றோரின் விருதுகளைப் பெறுவது ஐயாவின் கொள்கை வாழ்விற்கு அவமானம்.
இவ்வாறு ஏராளமானோர் பகிர்ந்து வருகிறார்கள்.
நல்லகண்ணு என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.