அவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில்….

தந்தை பெரியாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியைப் பேசி, பெரியார் மீது அவதூறு பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார்.

அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால்,

வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் வீடு முற்றுகையிடப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response