மோடி அரசின் புதிய கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்

தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கெதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கச் சுற்றுச்சூழல் அனுமதியோ, பொது மக்களின் கருத்துக்கேட்புக் கூட்டமோ அவசியமில்லை என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மக்களாட்சித் தத்துவத்தையே குலைத்து சனநாயக நெறிமுறைகளைக் கொலை செய்து வளக்கொள்ளையில் ஈடுபடத் துடிக்கும் மத்திய அரசின் இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.

தமிழக அரசு உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராகக் கொள்கை முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response