முஸ்லிம்களுக்கு எதிராக புதிய சட்டம் – சிங்கள அரசு முயற்சியால் பரபரப்பு

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததும் அச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தியது பாஜக அரசு.

இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.

மேலும் கைது செய்யப்படும் நபருக்கு, அவரது மனைவியின் கருத்துகளைக் கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும் இப்போது அது போன்றதொரு சட்டம் கொண்டுவர கோத்தபய அரசு முயல்கிறது.

இதுகுறித்து அக்கரைபற்றைச் சேர்ந்த வழக்குரைஞர் பஹீஜ்மீராமொகிதின் எழுதியுள்ள பதிவில்…

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரதன தேரரினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அனைத்து பிரஜைகளுக்குமான ஆகக்குறைந்த திருமண வயதாக 18 வயதை பிரகடனப்படுத்துவதற்கான சட்டமூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துஷித விஜேமான்ன பினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அவற்றிற்கு இசைவாக பொதுச்சட்டத்தையும் திருத்துவதற்கு முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை பற்றிய சமூக கருத்தாடலும் நடவடிக்கைகளும் அவசர அவசியமானவ

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல்களத்திலும் போராட எதிர்க்கட்சிகள் தயாராகிவருகின்றன என்று சொல்லப்படுகிறது.

Leave a Response