கமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகரில் நேற்று கூறியதாவது….

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத்தான் தாக்குவோம் என்றுதான் கூறினேன். வன்முறையைத் தூண்டும் நோக்கில் கூறவில்லை.

பாஜகவுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

நடிகர் சிவாஜி கணேசன் பற்றி முதல்வர் பேசிய கருத்து திரித்துக் கூறப்பட்டு வருகிறது.

அமமுகவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியது பொதுவான கருத்துதான். அவர் ஒரு ஆன்மீகவாதி. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதிசயம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும். நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது.

நாளை என்ன நடக்கும் என யாருக்கு தெரியும். பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்து இருந்தால் அவர் ஆட்சியைப் பிடித்திருப்பார். காலம் தாழ்த்தி விட்டார் ரஜினி.

இனி வரும் தேர்தல்களில் பணத்தை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது. மக்களின் ஆதரவு வேண்டும்

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,

ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா?

மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்.

– மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேட்டி.

என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு, அவன் வீட்ட விட்டே வெளிய வரமான்டுக்கா எப்படி பா அரசியலுக்கு வருவான்

என்று பலர் அஜீத்தை விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response