முத்தையா முரளிதரன் மனைவி செய்த வேலை – கோபத்தில் தமிழர்கள்

சிங்களக் கொடுங்கோலன் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சவின் ஆதரவு மாநாட்டில் நேற்று கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலரும் கலந்து கொண்டுள்ளார்.

மலை நாட்டு இளைஞர்களை உள்ளடக்கி பத்தரமுல்லையில் மலைநாட்டு இளைஞர் அமைப்பின் மாநாடு நடைபெற்றது இதில் கோத்தபயவும் கலந்து கொண்டார்.

அதில் மதிமலர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கோத்தபயாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று….

இவர் ஒரு பெண்

இவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் டாக்டர்.

இவர் சென்னையில் இருக்கும் மலர் மருத்துவமனையின் சொந்தக்காரர்

இவர் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் மனைவி.

இவர் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு எதிராக 17 பேர் தீக்குளித்து இறந்துள்ளார்கள்.

இவர் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டின் அரசு முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனைப் புரிந்த கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இவர் எப்படி அந்த கொலையாளிகளில் ஒருவரான கோத்தபாய ராஜபக்சவை மங்கள விளக்கேற்றி வரவேற்கிறார்?

இவரும் ஒரு பெண்தானே? கோத்தபாயாவின் முகத்தை பார்க்கும்போது அவரால் கொல்லப்பட்ட இசைப்பிரியாக்களின் நினைவு எப்படி இவருக்கு வராமல் போனது?

தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கோத்பாயாவின் கரங்களை எப்படி இவரால் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் குலுக்க முடிகிறது?

ஆம். இவருக்கும் பசிக்கும்தானே?

இவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில்தான் விஜயசேதுபதி நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response