மோடி சென்னை வருகை – ட்விட்டரில் டிரெண்டான திரும்பிப்போ மோடி

சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். இந்திய விமானப்படை தனிவிமானத்தில் மோடி காலை 6.50 மணிக்கு டில்லியிலிருந்து புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார்,

அங்கு பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடித்தபின்பு அவர் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கிண்டி ஐஐடி வளாகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹெலிபேடில் வந்து இறங்கி, பின்னர் அங்கிருந்து ஐஐடி வளாகத்துக்கு புல்லட் புரூப் காரில் செல்லவிருக்கிறார்.

ஐஐடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் காரில் ஐஐடியில் இருந்து ஹெலிபேட்டுக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

அங்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வழியனுப்பும் நிகழ்ச்சி முடிந்த பின்பு இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதம்ரின் இந்தப் பயணத்தை ஒட்டி ட்விட்டரில் மோடியே திரும்பிப்போ என்கிற குறிச்சொல் முதலிடம் பிடித்தது.

கடந்த சில முறைகளாகவே மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இந்ப்படி ஒரு குறிச்சொல் பிரபலமாவது வழக்கமாக இருக்கிறது.

Leave a Response