நான் அவனில்லை – நாஞ்சில் சம்பத் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் பேச்சாளராக இருந்த அவர், வைகோ பிரிந்தபோது அவருடன் சென்று ம.தி.மு.க வில் பிரசார பீரங்கியாக இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க-வில் இணைந்தவர், தினகரன் அ.ம.மு.க தொடங்கியதும் அவரது கூடாரத்துக்குச் சென்றார்.

பின்னர் அ.ம.மு.க-வில் இருந்து விலகி இப்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் ஆகியவற்றில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அதில், ஒரு இளம் பெண்ணுடன் மது குடிப்பது போன்றும், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் வருகிறது. ஒரு நிமிடம் 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ மிக வேகமாகப் பரவிவருகிறது.

இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டதற்கு,

“நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. நண்பர்கள் சொன்னார்கள். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. யாரு வீடியோவை போட்டான்னு தேடுறதுக்கும் நான் தயாரில்லை. புலி வேட்டைக்குப் புறப்பட்டிருக்கிறவன், எலிகளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. யார் தூண்டிவிட்டு யார் செய்தார்கள் என்றும் நான் யோசிக்கல. என்னுடைய மனசாட்சி கிளியராக இருக்கிறது. எந்தவிதமான தவறுகளுக்கும் என் வாழ்க்கையில இடமில்ல. என்னுடைய பயணம் தொடருகிறது” என்றார்.

டிவிட்டரில்,சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ளார்.மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும்’ என்றும்தெரிவித்துள்ளார்

Leave a Response