இது ஒரு புது அனுபவம் – பிக்பாஸ் குறித்து சேரன் கருத்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் இயக்குநரும் நடிகருமான சேரன் பங்குபெற்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அவருக்கு நிறைய ஆதரவும் அதே அளவு எதிர்ப்பும் இருந்தது.

இந்நிலையில் 91 நாட்கள் அவ்வீட்டில் இருந்த அவர் சில நாட்கள் முன்பாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அதன்பின் அந்நிகழ்வு தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்திருந்த சேரனுடன் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள் உரையாடிவருகின்றனர்.

இன்று ஒரு ரசிகர்,

மனதில் இனம் புரியாத ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கிறேன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் காலெடுத்து வைத்த முதல் நாளையும் கடந்து வந்த பாதையையும். உங்களுக்கு நிகர் நீங்களே

என்று பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சேரன்,

நானும் திரும்பி பார்க்கிறேன்
நான் சொன்னதுபோல என்னால் இருக்க முடிந்ததா.. இருந்தேனா என..

என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி தாண்டி இது புது அனுபவம். இவ்வுலகில் நாம் நாமாக இருப்பதுதான் கடினம்..

வாழ்க்கைச்சூழல் நம்மை வாழவிடாது.. வாழமுடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலி. நான் பாக்யம் செய்தவன்.

இவ்வாறு அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

Leave a Response